இயற்கை விவசாயம்- இன்றைய காலகட்டத்தில் படித்த இளைஞர்களின் பெரிய
கனவு.. கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களாக இருக்கட்டும் ஐடி துறை சார்
வல்லுநர்கள் ஆகட்டும் எல்லோரும் எண்ணக்கூடிய வருங்கால திட்டம் என்பது நிச்சயம் அதுவாகவே
இருக்கும், இருக்கவும் செய்கிறது.காரணம் விவசாயம் வருங்காலத்தில் பெரிய வியாபாரமாக
மாறக்கூடிய தொழில்.
விவசாயம் தமிழர்களின்
குலத்தொழில் ,முப்பாட்டனும் பாட்டனும் செய்த இயற்கை விவசாய முறைகளும் , அப்பன் செய்த
செயற்கை விவசாயமும் அவன் பிள்ளைகளாகிய நம்மையே அந்த தொழிலை செய்வதற்கு சூழ்நிலை அனுமதிக்க
வில்லையே . நம் பிள்ளைகளுக்கு எவ்வாறு கொண்டு சேர்க்க போகிறோமோ? குறைந்து வரும் பருவநிலை
மாற்றம் மழைப்பொழிவு,நாட்டு மாடுகளின் எண்ணிக்கை இது அத்தனையும் சொல்லும் இயற்கை விவசாயம்
அவ்வளவு எளிதான காரியமல்ல என்று. குப்பன் மகனும் சுப்பன் மகனும் இயற்கை விவசாயத்தை
கையில் எடுப்பதற்குள் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதை காசு பார்க்கும் தொழிலாக மாற்றி
ரெம்ப நாளாச்சு, ரிலையன்ஸ் தன்னுடைய எஸ்குலூசிவ்
ஷோரூம் களில் இயற்கை காய்கறிகளுக்கென்ற தனி கவுண்டர் வைத்து விலையை இரட்டிப்பு செய்து
விற்கத் தான் செய்கிறான் நாமும் அதை வாங்கி உபயோகிகித்து கொண்டு தான் இருக்கின்றோம்
..அதே இயற்கை விவசாய அங்காடிகள் சென்றால் நம்முடைய முதல் கேள்வி இது ஆர்கானிக் தான்
என்பதற்கு என்ன ஆதாரம்? ஆர்கானிக் சர்ட்டிபிகேட் இருக்கா? ...
இப்படி அசல்
இயற்கை விவசாய பொருட்களை தரம் சரிபார்க்கும் மூடர்களும் நம்மிடையே இருக்க தான் செய்கிறார்கள்
. பேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் விவசாயம் செய்பவர்களும் அதிக அளவில் வாழும் சமூகத்தில்
பிறந்து வளர்ந்து வருகிறோம். அரசும் இயற்கை
விவசாயம் சார்ந்த துறைகள் உருவாக்கி அதை செயல் படுத்தாத வரை , இயற்கை விவசாயத்தை அரைகுறையாக
கற்றுக் கொண்டு அதை வைத்து தொழில் செய்யும் ஈன போராளிகள் இருக்கும் வரையிலும் கார்ப்பரேட்
நிறுவனங்களின் கையில் சிக்கி பெரும் வணிகமாக மாறும்.
அருமையான கருத்து.
ReplyDeleteஅருமை அண்ணா
ReplyDeleteஅருமை மச்சா...
ReplyDeleteஉண்மையின் உச்சத்தில் உள்ள வார்த்தைகள் 😔
ReplyDeleteSuper da information..keep it up
ReplyDelete