கோடை உழவு -அதன் முக்கியத்துவம் - இவன் அ சரத்குமார்


மற்ற உழவு முறைகளுக்கும் கோடை உழவு செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

உழுதல் என்னும் செயல் முறைகளானது ஒரு பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை  பல்வேறு வகையான கலப்பைகளை கொண்டு உழுது நாற்றுகளையோ விதைகளையோ பயிரிடும் முறை ஆகும்

எப்படி உழ வேண்டும்?
எந்த அளவு ஆழத்தில் இருந்து உழ வேண்டும்?
என்ன கலப்பை கொண்டு உழ வேண்டும்?

இதை அனைத்தையும் நிர்மாணம் செய்வது எந்த பயிர் சாகுபடி செய்ய போகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டது

எடுத்துக்காட்டாக நெல் சாகுபடி என்றால் இரண்டு மூன்று வர உழவு (நீரற்ற உழவு) விட்டு  பிறகு சேற்று உழவு செய்ய் வேண்டும்

உழவு முறை என்பது ஒவ்வொரு பயிர் வகைகளை பொருத்து மாறுபடும்

பயிறு வகைகளாக இருப்பின்  மேலாக உழுதால் போதுமானது.கடலை குச்சி கிழங்கு வகைகளாக இருப்பின் மூன்று முறை சட்டி கலப்பை வைத்து உழ வேண்டும்

கோடை உழவு-விளக்கம்

பயிர் சாகுபடி முடிந்த பிறகு காலியாக உள்ள நிலத்தில் கொக்கிகள் கலப்பை அல்லது சட்டிக்கலப்பையோ உபயோகித்து மண்ணை உழவு செய்ய வேண்டும்.மேல் மண் கீழ் மண் இரண்டும் கலக்கும் வரை உழவு செய்வது உகந்தது

வெயில் காலங்களில் வெப்ப சலனம் காரணமாக மழைப்பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது ஆக மழை பெய்வதற்கு முன் கோடை உழவு செய்வது மிகவும் உகந்தது

நன்மைகள்

1. கட்டியாக உள்ள மண் பகுதி மிருதுவாக மாறுவதால் மண்ணில் காற்றோட்டம் மற்றும் ஈரப்பதம் அதிகரிக்கும்

2 மண் துகள்களுக்கு இடையே ஆன இடைவெளி அதிக அளவு இருப்பதால் மழை நீரானது மண்ணில் அடிப்பகுதி வரை ஊடுருவி செல்லும்

3.வெப்பம் மற்றும் குளிர்ச்சியான சூழ்நிலை காரணமாக மண்ணின் வளம் அதிகரிக்கிறது

4. கலப்பை கொண்டு உழுவதில் மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து நுண்ணுயிர் பெருக்கம் பல மடங்காக உயர வாய்ப்பு உண்டு

5. மண்ணில் இடப்படும் தொழு உரம் மற்றும் குப்பைகளை கிரகித்துக் செரித்து சத்துக்களாக மாற்றம் செய்கிறது

6.மழையின் போது வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் சத்து மழைநீரில் கரைந்து மண்ணில் சேர்வதால் மண்ணுக்கு தழைச்சத்து கிடைக்கிறது

6.களைச்செடியின் விதைகள் மற்றும் பூஞ்சாண நோய்க்காரணி கிருமிகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் மற்றும் கூடுகள் வெப்பநிலை காரணமாக இறந்தது விடும்

7.ஆழ உழுவதன் மூலமாக மண்ணில் விழும் மழை நீர் வழிந்து ஓடி வீணாக்காமல் நிலத்தின் உள்ளேயே பாய வாய்ப்பு உள்ளது


படைப்பு: இவன் அ சரத்குமார்.BSc Agri ,MBA

Comments

Post a Comment