நாம் செங்கற்களை
புதிதாக வீடுகட்டும்
இடங்களில் பார்த்திருக்கிறோம்;
ஆனால், அக்கற்கள்
ஒவ்வொன்றும் உருவாக்கப்படுவதின்
பின் உள்ள
வலிகளை நாம் அறிந்திருக்கின்றோமா!!!.....
தாம் வாங்கிய கடனை
திரும்ப செலுத்தயிலாத
படிப்பறிவற்ற பாமரமக்களை
அவர்களின் விழிப்புணர்வில்லாமையைப்
பயன்படுத்திக் கொண்டு
தங்கள் பணப்பசிக்கு
இரையாக்கிக் கொள்கின்றனர்,
சில பணந்திண்ணிகள்.
பாலாடையினை உட்கொள்ள
வேண்டிய பிஞ்சு உதடுகள்
செம்மண்ணை பூசிக்கொண்டு
புசிக்க வழியில்லாமல்
திண்டாடுகின்றன.
மாதவிடாய் வலிகளைக்கூட
தங்கள் மார்போடு
மறைத்துக் கொண்டு
பணிபுரியும் மங்கையர்கள்.
கல்வியறிவைப் பெறவேண்டிய
வயதினில் செம்மண்ணிலிருந்து
கற்களைப் பிரித்துக்கொண்டிருக்கும்
பிஞ்சு விரல்கள்.
செங்சூலையிலிருந்து வரும் புகை
காற்றில் கலப்பதுபோல;
இவர்களின்,கணவும்
காற்றோடு கலந்துவிடுகின்றன.
சந்ததி முழுவதையும்
இச்செங்கற்சூலைக்கு தாரைவாத்துச்
செல்கின்றனர்.
என்றாவது ஓர்நாள்
விடியும் என்கின்ற நம்பிக்கையில்,
இவர்கள் கால்கள்
இம்மண்னில் நடைபோட்டுக்கொண்டிருக்கின்றன!!!!
Great work....keep soing...expecting more articles from u....all the best....🌹
ReplyDeleteGreat work....keep soing...expecting more articles from u....all the best....🌹
ReplyDelete