'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள்',
என்ற வரிகளை மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன். கடந்து செல்லும் கரும் மேகங்கள் மழைநீரை
பொழிந்து செல்வது போல், என் வாழ்க்கை என்ற கானகத்தைக் கடந்த பெண் மேகத்தைப் பற்றி சொல்ல போகிறேன்.
சின்னஞ்சிறு பாலகன்
நான். சாதாரன கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் ஆடு மாடுகளுடன் உலாவிக்கொண்டிருந்த
என்னை சிறையில் அடைக்க முடிவு செய்தனர். சிறைச்சாலையைவிட கொடுமையானதாய்
பாடசாலையைக் கண்டு பயந்தேன். "கடன்பட்டாலும் காஸ்ட்லியாக படிக்க வைக்க வேண்டும்",
என்பதே என் அப்பாவின் எண்ணம். எனவே 'ஹோலி மதர்' என்ற தனியார் பள்ளியில் என்னை சேர்த்தார்கள்.
தினமும் காலையில் என்னை எழுப்பி குளிக்க வைத்து சீறுடை காலணிகள் அணிவித்து பள்ளி வாகனத்தை பிடிக்க என்னை தூக்கி
கொண்டு ஓடுவார்கள், ஒரு நாள்கூட தாமதம் ஆவதிலிருந்து தவரியதில்லை. இதுவரை எப்படி என்று
தெரியவில்லை, என் அம்மா சமைத்த உணவு எனக்கு பிடிக்கிறதோ இல்லையோ எரும்புகளுக்கு மிகவும்
பிடித்துவிட்டது போல, வகுப்பறையில் எங்கு வைத்தாலும் அழையா விருந்தினராக எரும்புகள்
வந்துவிடும். ஏன் இப்படி என்று யோசிக்க தெரியவில்லை, உணவை கீழே கொட்டிவிட்டு அமைதியாக
ஓர் ஓரமாய் அமர்ந்துவிடுவேன். ஆசிரியரோ நண்பர்களோ ஏதும் கண்டுகொள்ளாமல் இருந்ததால்,
நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தேன், பதில்கள் கிடைக்கவில்லை.
இப்போது நினைப்பதற்குக் கூட சிரிப்பாய் உள்ளது, அப்போது நான் எடுத்த முடிவு "எரும்பு
இனத்தையே அழிக்க வேண்டும்", என்பதுதான். பெரியவன் ஆனதும், கொத்து கொத்தாய் எரும்புகளை
கொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
செல்வபிரசாந்தி,
செல்வபிரியா என் சகவகுப்பு தோழிகள். நான் உணவு இல்லாமல் இருந்ததை உற்று நோக்கியது அவர்கள்
மட்டும்தான். பெயரால் மட்டும் அல்ல மனதாலும் அவர்கள் செல்வந்தர்களே, என்றெல்லாம் உணவில்லாமல்
இருக்கிறேனோ அன்றெல்லாம் அவர்கள் உணவை என்னோடு பகிர்ந்து கொள்வார்கள். அன்றிலிருந்து
என் மனதில் அவர்களுக்கு என்று ஒரு தனி மதிப்பும் அன்பும் உண்டு. அதிலிருந்து படிப்பு,
விளையாட்டு என அனைத்திலுமே என்னையும் உடன் சேர்த்துக்கொள்வார்கள். ஆரம்பகட்ட கல்வியை
அவர்களுடன் படித்தேன், பின் குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு பள்ளியில் என்னை சேர்த்து
விட்டார்கள். பின் நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது,
என் அம்மா ஹோலி மதர் பள்ளியில் படிக்கும் சிலரை பேருந்து நிறுத்தத்தில் பார்த்ததும்
"என் மகனும் ஹோலி மதரில் தான் படித்தான்", என்று கூறியுள்ளார். உடனே பெயர்
என்ன என்று கேட்டுள்ளனர். என் பெயரை கூறியதும் "எனக்கு தெரியும் நாங்க இரண்டுபேரும்
ஒரே வகுப்பு தான், நல்லா இருக்கானா",
என்று சரமாரியாக என் அம்மாவிடம் பேசியுள்ளாள் செல்வபிரசாந்தி. கிட்டத்தட்ட பத்து வருடமாக
அவள் பெயரைக் கூட நான் வாய் திறந்து உச்சரிக்கவில்லை என்றபோதிலும் அவள் நினைவில் இருந்ததை
நினைத்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். மீண்டும் பதினோராம் வகுப்பு என்னுடைய பள்ளியில்
வந்து சேர்ந்தால், பெரிதாக ஏதும் உரையாடி பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு பலகவில்லை எனினும்
பார்க்கும் போது ஒரு சிரிப்பின் மூலம் நான் அவளுடைய நண்பன் என்று உணர்த்துவாள். அதன்
பிறகு அவள் பிறந்த நாளில் நானும், என் பிறந்த நாளில் அவளும் வாழ்த்துகள் கூறிக்கொள்வோம்.
"தினமும்
பூக்கும் நட்சத்திரம் அல்ல
அரிதாய் அலங்கரிக்கும்
வானவில்
எங்கள் நட்பு."
Lifelong friendship is like a precious stone. Take care of a precious stone . Nice story
ReplyDeleteYaaa, definitely
ReplyDeleteவாவ் 😍செம்ம 😁
ReplyDelete