அற்புதா தயாளன்

காரிகையே!
உன் வாழ்க்கை கதையை நீ எழுதுவதற்குள் பேனாவை யாரிடமும் தந்துவிடாதே;
மை தீர்ந்து போனால் நொந்து போவாய் ,
உன் வரலாறை நீயே எழுது;
அதில் உனக்கு என்ன தோன்றுகிறதோ
அதையே எழுது;
அது சரித்திரமோ,
இல்லை சாகசமோ,
அது உற்சாகமோ,
இல்லை சோகமோ,
புரிந்து கொண்டேன்
ஒரு பொன்மொழியை;
உன் வாழ்க்கை உன் கையில்,
துணிந்து நில்;
எதிர்த்து போராடு
ஆனால் ஒரு நாளும்
புற முதுகிட்டு ஓடி விடாதே;
அன்று ஊர் மட்டும் அல்ல,
உன் உயிர் கூட ,
உன்னை பார்த்து சிரிக்கும்;
ஆழ்கடலே உனை சூந்தாளும் ,
சிறு துளி என துட்சமாக கருது;
உன் நுட்பமான திறம் கொண்டு,
இதுவே உன் வாழ்க்கை வரலாறாக
சரித்திரத்தில் எழுதப்படட்டும்;
நீ தான் வேலூநாச்சியார்,
நீ தான் மணிகர்ணிகா,
நீ தான் அஞ்சலை அம்மாள்,
இவ்வாறென உனக்குள்
 ஓர் கர்வம் எழட்டும் ;
அது சுழற்றி போடட்டும்,
உன்னை எள்ளி நகையாடுபவர்களை;
மறந்து விடாதே பெண்ணே!
நீ தான் சக்தி,
கடவுள் மீது கொள் பக்தி;
கூர்மை ஆகட்டும் புத்தி,
தடைகளை தகர்த்தெறிந்து;
ஆடு உன் வாழ்க்கை விளையாட்டை,
ஆனால் விளையாட்டாக அல்ல;
அயராமல் உழை,
ஆனால் உன் உழைப்பில் ,
பிறர் இளைப்பாற கூடாது;
திண்ணமாக இரு,
ஒளி தீபமாய்;
எரிந்து கொண்டிரு,
உனக்கு வானமே எல்லை;
 இதை  மனதில் கொள் ,
உன் பொன் உடல்;
இம்மண்ணை சேறும் வரை!


Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. nice lines and all the best for your upcomings.......

      Delete
  2. அருமையான வரிகள்... மேலும் மேலும் பதிவிடுங்கள் ...
    வாழ்க தமிழ்

    ReplyDelete
  3. 💪அருமை 👩‍⚕️

    ReplyDelete
  4. Sema lines dear 👌👌👌👌👌

    ReplyDelete
  5. அருமையான வரிகள்

    ReplyDelete
  6. அருமையான படைப்பு

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete

Post a Comment