அறிவியல் ஒரு அறிமுகம் - விஷ்ணு


அறிவியல்……1 ஆம் வகுப்பிலிருந்தே அழகழகாய் வண்ணம் சொருகி அலங்கரிக்கப்பட்ட பாடப்புத்தகம் என்றால் அது அறிவியலாகத்தான் இருக்கும். ஒரு மாணவன் அறிவியல் பாடத்தை வெறுக்கிறான் என்றால், அவனது ஆசிரியருக்கு ஏதேனும் குறைபாடு இருக்க வேண்டும். அல்லது அந்த மாணவனுக்கு ஏதேனும் குறைபாடு இருக்க வேண்டும். மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இவ்வளவு தூரம் வரை நாம் முன்னேறி இருக்கோமென்றால் அதற்கு முழுமுதற்காரணம் அறிவியல் மட்டுமே. நிலாவை பார்த்து சோறு ஊட்டும் காலம் போய் இன்று நிலாவிற்கே சென்று சோறு சாப்பிடும் நிலைக்கு வளர்ந்துவிட்டோம். பறவையை பார்த்து விமானம் கண்டுபிடித்தோம். மீன்கள் பார்த்து நீர்முழ்கி கப்பல்களை கண்டுபிடித்தோம். இப்படி வளர்ந்த அறிவியலோடு கூடவே பல கேடுகளும் தீமைகளும் வளர்ந்தன. அது தான் ஹைட்ரஜன் அணுகுண்டுகள். அறிவியலுலகத்திற்கு முதலெதிரி என்றே அதை கூறலாம். 1945 இல் அமெரிக்கா ஜப்பான் மீதெரிந்த அந்த இரு குண்டுகளை நாம் அனைவரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு தொடங்கியது அறிவியலின் அழிவு பாதை. இன்று செயற்கை நுண்ணறிவியலில் வந்து நிற்கிறது. டெர்மினேட்டர் படத்தில் வருவதை போல மனிதனை மனிதால் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் அடிமைப்படுத்தும் என்கிறார் சோபியா. சோபியா சௌதி அரேபியாவின் முதல் குடியுரிமை பெற்ற ரோபோ. ஒரு பெரிய மனித படையை அழிக்க இவர்கள் உருவாக்கிய இன்னொரு படைப்பு தான் Drone Weaponary. ஒரு மனிதனின் மூளைக்குள் சென்று ஓட்டைப்போட்டு அவனை அழித்துவிடுமாம். இந்த டோரோன் வெப்பனரியை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.



Comments

  1. Useful information. Nice style to explain the information

    ReplyDelete
  2. அறிமுகமே ஆர்வத்தை.....தூண்டுகிறது........

    ReplyDelete

Post a Comment