கவிமதி

வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு
சமர்பனம் ❤
        பி.கவிமகேஷ் 💖
           எண்ணவளின் எண்ணம் 💞


உழவனின் உழைப்பை அறிவேன்
உழும் முறையும் அறிவேன் -யானும்
உழவன் ஆவேன் ஏனென்றால்
நான் மாணவன்
வேளாண் கல்லூரி மாணவன்!!!!❤

மண்ணை அள்ளி பூசி கொண்டேன்
மண்புழுவோடு பேசி விளையாடினேன்
மர செடிகளிடம்
மனதை பறி கொடுத்தேன் ஏனென்றால் நான் மாணவன்
வேளாண் கல்லூரி மாணவன்!!!!❤

பயிரோடு விளையாடி
பங்குனி வெயிலோடு உறவாடி
பாடும் குயிலோடு இசையாடி
பசியை மறந்தேன்-இப்
பயிர்களின் நடுவே அமரும் வேளையில் ஏனென்றால்
நான் மாணவன்
வேளாண் கல்லூரி மாணவன்!!!!❤

காய்கறிகளும் கண்துடைக்கும்
யான் கவலையில் வாடினால்
இலை தலைகளும்
இசை அமைக்கும் யான்
இன்பம் பல காணும் போது.!!!!
இவையே என்னுயிர் தோழன்கள்!!!
ஏனென்றால் நான் மாணவன்
வேளாண் கல்லூரி மாணவன்! !!!❤

விதைப்பவன் நான்-அதில்
விண்ணுலகின் பசி
போக்குபவன் நான்! !!
வியர்வை சிந்துபவன் நான்-அதில்
வியப்பு  பல அடைந்தவன் நான்!!!
ஏனென்றால் நான் மாணவன்
வேளாண் கல்லூரி மாணவன்! !!!❤

வரப்பு சாப்பாடும்-அதில்
காணும் சந்தோஷமும்
வான் பொழியும் மழைநீரும்-அதில்
நனையும் சுகமும் யான்
நன்கு அறிவேன் ஏனென்றால்
நான் மாணவன்
வேளாண் கல்லூரி மாணவன்! !!!!❤

தலப்பாகட்டும்  எனதே!!!
தரணியின் பசி தீர்க்கும்
தலைவன் பட்டமும் எனதே! !!
ஏனென்றால் நான் மாணவன்
வேளாண் கல்லூரி மாணவன்! !!!❤

பூக்களோடு புன்னகைத்து
பூச்சிகளோடு வினவித்து
பூமகனாய் இப்பூவுலகில்
வாழ்வதும் நானே!!!!
ஏனென்றால் நான் மாணவன்
வேளாண் கல்லூரி மாணவன்! !!❤

வியப்புகள் பல கண்டு
விண்ணை தொடும் சாதனை
பல செய்யவே -யான்
விவசாயி ஆகி போனேனோ!!!!!❤

மண்புழுவே என்னுயிர் தோழன்
மண்வெட்டியே எங்கள் பிள்ளை!!!
இன்னும் எத்துணை
எத்துணை சந்தோஷம் யான்
கண்டேன் இந்த விவசாயத்தில்!!!❤

விவசாயி என்று சொல்லும்போதே
என் நாடி துடிப்பு-இன்னும்
நான்கு ஆயுளுக்கு சேர்ந்து
துடிக்குதடா! !!!
இதற்கு  தான் எனக்கு
வேளாண் மாணவன் என்று
பெயர் சூட்டினாரோ! !!!❤


    

Comments

  1. கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள்.
    நானும் வேளாண் கல்லூர் மாணவன்,
    விவசாயியின் மகன்...

    ReplyDelete

Post a Comment