கல்லறைத் தோட்டம் பகுதி 1 - அருள்மணிகண்டன்


அன்று அவன் காலைப் பொழுதில் தன் மிதிவண்டியை மிதித்தபடியே மூச்சடைத்து வந்தடைந்தான் தான் பயிலும் பள்ளிக்கு...
   
    அன்றைய அவனின் உயர்நிலை கல்விக்கான வகுப்புகள் தொடங்கும் நாள். மிகச் சரியாக சிறிய முள் 9-ல் மற்றும் பெரிய முள் 12-ல் அடித்து நின்றது அங்குள்ள சுவர்க் கடிகாரத்தில்....
     
     மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் எல்லாம் காலை வழிபாட்டிற்கு மைதானத்தில் திரண்டனர். பள்ளியின் முதல்வர் அனைவரும் முன்னிலையில் அவனையும் அவனுடைய பயில இணைந்தவர்களையும் பாராட்டி வரவேற்றார். அனைவரின் ஆழக்குரலும் இசைத்தது ஜனகணமன...முடிவுற்று ஒருவர் பின் ஒருவராய் தங்களுடைய வகுப்பறையை அடைந்தனர். அவனும் தன் வகுப்பறை அடைந்து தன் மேசையை ஒன்றை உரிதாக்கி அமர்ந்தான்.
      வகுப்பாசிரியர் வந்ததும் வணக்கம் வைத்து அனைவரும் அமர்ந்தனர் வருகை பதிவேட்டில் பெயர்களை வாசித்தபடியே வர, அவர்களும் பதில் கூறவே, அவன் கையை உயர்த்தினான் "முருககணேஷ்" என்ற பெயர் ஒலித்த நொடியில்!!!
     
      மீண்டும் ஒலித்தது ஒரு குரல்..."அப்பா" என்று அவனின் பின்பக்கமிருந்து... அவனும் ஆரவாரமில்லாமல் ஆசையாய் திரும்பி தன் குழந்தையை தன் கரம் கொண்டு அணைத்துக் கொண்டான் தன் தொடை அருகில்...
அந்த சிறுந்தளிர் கண்களிலேயே 'என்ன'-வென்ற கேள்வி எழுவதை எண்ணி... "அம்மு" என்று அழைத்து அமர்த்திக் கொண்டான் தொடை மீது...
     வானிருந்து தேவதையே வரமாய் வந்ததாய் உணர்ந்து பூரிப்பு மகிழ்ச்சி அவன் முகம் அளிக்க தேவதை செவி உணர ஆரம்பித்தான்!!!
   "அன்று" என சொல்லியபடி....
   அன்று முதல் நாள் வகுப்புகள் சிறப்பாக முடிந்தே ஆனந்தம் நிறைந்த இதயமாய் மீண்டும் மிதித்தபடியே மிதிவண்டி மிதமாய் சுழன்றது மாலையில்... முகில் பின் வெட்கத்துடன் கதிரவன் சிவந்திருக்க....

     மறுநாள் காலை அனைவரும் அமர்ந்திருக்க முதல் வகுப்பு முடிவுற்றது இருந்த நிலையில் அவன் கண்களோ ஏதோ தேடி சென்று எதார்த்தமாய்...
    தென்றல் சன்னல் வழியாக வந்து அவன் முகம் கடக்க அதே எதார்த்தம் உணர்ந்து எதிர் திசை திரும்பவே கண்கள் ஆசையில் விதியாய் மலர்ந்தது ஒரு முகம்...
    அவன் ஆசையாய் புன்னகைக்க பரிசாக முகம் ஒரு நொடி இடைவிடாது பரிசலளித்தது புன்னகையில்....
    மறுகணமே அவனும் அவளும் மொழிவழி முன்மொழிந்தார்கள் ஏதோ வருடங்கள் பல பழகியவர்களாய்....
    ஆச்சரியம் அடைந்த உடன் இருந்தவர்கள் உரைக்க அவள் விலகிச் சென்றாள் "வருகிறேன்" என்று...அவன் கண்களும் அவள் வருவாள் மீண்டும் என்ற நம்பிக்கை பதிலளித்தது.
     பசிபோக்கும் மணி ஒலிக்க தன் சாப்பாட்டை எடுத்து வேகம் கொண்டான் அவளிடம் நோக்கி....கிடைத்ததோ ஏமாற்றம்.
     உருக்கமாய் உண்டுவிட்டு வகுப்பறை அடைந்தால் நொடிகள் நகர்ந்தன நிமிடங்கள் ஓடின நான்கு மணி ஆயிற்று ஒலித்தது தூரத்தில் சத்தம் டிங்...டிங்...டிங்...
 ஒலித்தது..ட்ரிங்..ட்ரிங்...ட்ரிங்...சட்டென மனம் விட்டு திரும்பினான். அங்கே மேசையில் தொலைபேசி அலறியது. தன் தொடை அமைந்திருந்த அம்முவை கீழே அமர வைத்து எழும்பினான். தொடர்ந்து ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...எடுத்தான்.
   
      "மாமா! நான் வருவதற்கு இரவு ஆகிவிடும் அவருக்கு உணவளித்து விடுங்கள் மறக்காமல்" என்றாள் தன் தாய் வீடு சென்று திரும்பிய அவன் துணைவி.
   "சரி" என்று மறுப்பது அளித்துவிட்டு "பத்திரம்"என்றான் அவளிடம் காதல் வெளிப்பாடாய்...
தொலைபேசி அதை மௌனமாக்கி திரும்பியே அவன் மூச்சிரைத்தான் அம்முவை நோக்கி...
   
       மீண்டும் தன் இருப்பிடம் வந்தவன் அம்முவின் அருகில் அமர்ந்தான் தொலைதூரம் சென்று தன் மனம் தேடி...
      நுழைந்தான் அவன் வகுப்பறை உள்ளே...அவன் மீண்டும் அம்மனம் நிறைந்திருந்த அவளும்....
     முகம் பளிச்சென்று காணப்படும் காரணம் ஏனோ நாளை மற்ற வகுப்பு முதல் இடைக்கால தேர்வு நடக்கிறதாம், அதற்கு ஒத்துழைப்பாக அவளிடம் வந்தடைந்திருக்கிறது அவளது கால்கள்...         
      ஒரு தினப்பொழுதின் சோர்வும் அல்லாது உடன் செல்ல ஆயத்தமானான்,  இருவரும் புன்னகை சேர்த்து செயலாற்றினர்...
    ஓர் வகுப்பறை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டு இருவரும் ஈடுபாட்டில் முறையை முடித்தனர் பின்வருமாறு....         
      கரும்பலகை சுத்தம் செய்து தேர்வு எண்கள் குறிப்பிடுதல்
    எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தேர்வு எழுத ஏற்ற மேசைகளை வரிசைப்படுத்துதல்
    மேசை மீது மாணவர்கள் சரியாக வரிசையாக அமர அடையாளமாய் சுண்ணாம்புக் கட்டி கொண்டு அலங்கரித்தனர் தேர்வு எண்களால்...
( முடிவற்றது மேற்கண்ட நிகழ்வு மணி)

        மணி சரியாக 4:45 ஆயிற்று, அவள் பள்ளி பேருந்தில் செல்ல அவன் அப்பேருந்து பின்செல்ல நகர்ந்தான். அவன் செல்லும் வழியும் அவள் வீடு...
   பேருந்திலிருந்து இறங்கி காத்திருந்தால் ஒரு செல்லாமல் செவி சேர்ந்த அவன் மிதிவண்டி ஒலி கேட்க சட்டென திரும்பினாள் அவனை நோக்க...
    மிதிவண்டி மணியை ஒலிக்க அவன் கைகள் நிறுத்த கால்களை தொட்டு அவளிடம் நிறுத்தினான்.
     அவள் தன் வீட்டை அறிமுகம் செய்து வைத்து விட்டு, "வா உள்ளே டீ குடிக்கலாம்... அப்புறம் போ" என்றுரைத்தாள்.
     அவன் அவளிடம் "இல்லை...ஏற்கனவே லேட்டாயிடுச்சு நான் கிளம்புகிறேன் இன்னொரு நாள் வரேன்" என்று கூறி விட்டு கையை அசைத்து மிதிக்கத் தொடங்கினான் மிதிவண்டியை...
   அவள் சிரித்த படியே "பார்த்து செல்" என்று கையசைத்தால் ஒரு நாள் நெஞ்சம் நிறைந்த ஆனந்தம், காரணம் அவன்/ அவள் உருவானதே இன்று வாழ்வில் என ஆச்சரியமாய் எப்படியொரு உறவு பார்த்துக்கொண்டு சிறுபொழுதில் என்று எண்ணியபடி இருவரும்...அவன் மிதிவண்டியில், அவன் தன் தாய் மடியில்... சிந்தனையுடன்!!!



Comments

  1. Nice lines... Congrats👏want more like this... Think big my frnd... All the best👌👌👍

    ReplyDelete
  2. நன்றாக உள்ளது நண்பா....இதை தொடர எங்கள் வாழ்த்துக்கள்...கதையை எழுதிய விதம் அருமை

    ReplyDelete
  3. தம்பி வாழ்த்துக்கள்....
    இனியும் இது தொடர .

    ReplyDelete
  4. நிகழ்காலத்தில் இருந்தபடி,
    நினைவுகளைப் பின்னோக்கித் திரும்பி இழுத்து வரும் கதை சொல்லும் முறை அருமை நண்பா..❤️

    ReplyDelete

Post a Comment