திருமாவளவன் எனும் தலைவன் - செல்லமுத்து


         கேட்போர் எவனும் இல்லை என்று கேலி பேசி கேவலம் செய்தனர். தட்டிக் கேட்க நாதியில்லாததால் தண்ணீரை கூட கைமடக்கி குடிக்க வைத்தனர். சக்கர வண்டியில் மேலவன் அமர்ந்து சென்றால் இங்கே கீழவன் துண்டு இடுப்பை கட்டி அணைக்கும். பஞ்சமி நிலங்களை சாதிய பராக்கிரமத்தால் அபகரித்து ஆண்டனர்.

     சாதிமறுப்புத் திருமணத்தாலும் சாதியற்ற சமூகம் படைக்கலாம் என்றால், அதனையும் சாதிக்கு ஊர் ஊராக எரித்து சாம்பலாக்கினர் வாக்களிப்பது மனித உரிமை என்றால் உரிமையைப் பறித்து மனிதனாக கூட மதிக்காமல் செய்தனர்.

       இது மட்டுமா? இன்னும் எத்தனை...

      எத்தனை அத்தனைக்கும் ஒலித்தது ஒரு குரல் நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், முறுக்கிய மீசையும், முண்டாசு கட்டி வீரராக வலம் வந்தார் அவர். சாதாரண விறகுவெட்டி மகனின் குரல் பாமர மக்களுக்காக பாராளுமன்றத்தில் ஒலித்தது. மக்கள் போராட்டங்கள் அனைத்திலும் முதல் நின்றவனை குறிப்பிட்ட சமூகத்தின் சாதிய தலைவனாய் கண்டது இந்த சமூகம்.
     அரியணையில் இவன் அதிகாரம் இல்லை என்றதால், ஆதிக்க சாதி என்றவனின் கோரதாண்டவம் தலைவிரித்து ஆடியது. ஆடிய ஆட்டத்தை எல்லாம் வந்தது அந்த நாள்...

     மாலைப் பொழுது வரை இழுபறியில் சென்றாலும், நள்ளிரவில் வெற்றி முகம் கண்டான் அவன். இழந்த உரிமையை போராடிப் பெற முடியாது ஆட்சி அதிகாரத்தால் மட்டுமே பெற முடியும் என்று அண்ணல் அம்பேத்கரின் மொழியை தன் வாழ்வின் தத்துவம் ஏற்று களம் கண்ட அவன் கால்கள் தற்போது பாராளுமன்றத்தில் வாயிலில் பரிசாக தயாராகிறது..

"சாதித் திமிரால் ஆடிய கால் சற்று சாந்தம் பெறட்டும்...ஆணவமாக அரிவாள் எடுக்கும் கைகள் சற்றே நடுங்கிக் இருக்கட்டும்"

சாதியல் கொஞ்சம் இனி ஒருவன் உருவாகுவான் என்றால் அவனிடம் அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி, மண்ணில் வீழ செய்வோம்.. சாதியற்ற சமூகம் படைப்போம்"

வருங்கால தலைமுறையை நன்றாக வாழ வைப்போம்
நாம் சாதிக்காகப் பிறந்தவர்கள் அல்ல...சாதிக்கப் பிறந்தவர்கள்...


Comments

Post a Comment