கல்லறைத் தோட்டம்- பகுதி 2 - அருள்மணிகண்டன்

மறுநாள் காலை....
அவன் வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பினான். அவன் வகுப்பில் அவனைப் பிடித்து அவனோடு நெருங்கினர் நண்பர்கள் மூவர். அன்றே அவர்கள் நால்வரும் பச்சென்று ஒட்டிக் கொண்டனர்.
மதியம் உணவு வேளையில் நால்வரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.
அன்று மாலை ....அனைத்து வகுப்பிற்கும் ஒரு சர்க்குலர் வந்தது. அதை வாங்கி வாசிக்கத் தொடங்கினாள் வகுப்பின் லீடர், "நாளை தங்களுக்கு வழக்கம் போல் பள்ளி செயல்படும் " என்று அவள் படித்துரைக்க அச்சோ...அய்யோ....ச்சே...னு எல்லாரும் புளம்பிக் கொண்டார்கள். ஏன்னா...நாளைக்கு மற்ற கீழ் வகுப்பிற்கு எல்லாத்துக்கும் லீவு....
.....பள்ளி மணி ஒலித்தது சரியாக 4 மணிக்கு....
வீட்டின் மணி ஒலித்தது அவன் அம்முவிற்கு சாப்பாட்ட ஊட்டிவிட்டுட்டு கை கழுவும் போது சரியாக இரவு 9 மணிக்கு...வீடு திரும்பிய அவன் மனைவி வாசலில்...
அவன் சென்று டோரை திறக்க...அவள் சிரித்தபடியே உள்நுழைந்தாள்.
"அம்மு சாப்டியா ? " னு அவ கேட்க , "அப்பா ஊட்டி விட்டாருமா " என்றாள் டிவியில் டாம் அன்டு ஜெர்ரி பார்த்தபடியே அம்முவும்...
அவனும் அவளும் பெட் ரூம்ல....
"அம்மா எப்படி இருக்காங்க "
"ம்ம்ம்...நல்லாதா இருக்காங்க , என்ன மாப்பிள்ளை வந்திருந்தா பரவாயில்லை" னு சொன்னாங்க ....என்றாள் அவள்.
"ம்ம்...அப்புறம் இங்க வந்து இறங்குனதும் என்னோட தமிழ் வாத்தியார பார்த்தேன்...அதா கொஞ்ச லேட் ஆயிடுச்சு பேசிட்டு வர" என்று அவள் பேசிட்டு இருக்க...அவன் கண்களோ இமை மூடி இருக்க....மனமோ...???

.....மன கஷ்டதோடு அன்று வீட்டுக்கு கிளம்பினார்கள் பள்ளி மணி ஒலித்த பிறகு....ஆனால் அவனுக்கு சந்தோஷம் காத்திருந்தது பள்ளி சைக்கிள் நிறுத்துமிடத்தில்....
அவளே வந்து இவனிடம் " நாளைக்கு நா சைக்கிள தா வருவ...உன் கூட வரட்டுமா " னு கேட்டாள்.
அவன் தலை வலதும் இடதுமாய் சாய்ந்தாடியது. அவளும் கண் சிமிட்டி ..." டாட்டா...டாட்டா..." என்றாள் பின்நோக்கியே நடந்தபடி...
 காலையும் வந்தது ...அவன் சைக்கிள எடுத்து சரசரசர-னு ஓட்டிட்டு வந்து அவ வீடு முன்னாடி தா நின்னான்...
" அம்மா , போயிட்டு வரேன் " னு சொல்லிக்கிட்டே வெளியே வந்தாள் அவள் ...அவளின் சைக்கிளோடு...
இருவரும்...ஏறி மிதித்தபடியே மிதிவண்டியில் மிதவேகத்தில்...
....பள்ளி வந்தடைந்தார்கள்...
அவள் , " ச்சே... சரியா பேசிக்காமயே வந்துட்டேன் " னு வருத்தப்பட்டு சொன்னாள்...ஆனால் வருத்தம் என்னவோ இருவருக்குமே தான்...
அவன் , " சரி...சாயிங்காலம் பாக்கலாம் " னு சொல்லிட்டு அவனோட வகுப்பிற்கு சென்றான்.
வகுப்பில்...நால்வரும் ஒன்றாக அமர்ந்து கொண்டார்கள். அன்று அவர்களுக்கு தமிழ் வகுப்பு மட்டும் தான் நாள் முழுதும்...
" வணக்கம் ஐயா " என்று எல்லோரும் சொல்லியதோடு சரி...அதுக்கு அப்புறம் ஐயா தன் தமிழாற்றலை ததும்ப ததும்ப அள்ளி தெளித்துக் கொண்டிருந்தார் அவர்களின் மூளையில்...
நேரம் ஓடி முடிய...இல்லை , இல்லை...நேரம் ஓடி முடிந்த பிறகும்....தமிழாற்றல் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது...எல்லோரும் சேர்ந்து , " ஐயா...............யா " னு கத்துற வரைக்கும்....
வகுப்பிற்கு வெளியே அவள் காத்திருக்க தொடங்கியே பல நிமிடங்கள் தாண்டியே போயிருக்கும்....அவன் அவளை ஜன்னல் வழியே நோக்கி கொண்டிருக்கும் போது....
" சரி , கடைசியா உங்களுக்கு எல்லா ஒரு புதிர் " னு , ஐயா உரைக்க ஆரம்பித்தார் .
" ஒரு காட்டுல ஒருத்தன் நடந்து போயிட்டு இருந்தானாம் . அப்போ அவனுக்கு காலுல முள் ஏறிடுச்சு...வலி பொறுக்க முடியாத அவன் அருகில் மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் கேட்டானாம்...இதற்கு மருந்து என்னவென்று??? முனிவர் சொன்னதோ...
" பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்ருவின் பத்தினியின் கால் எடுத்து தேய் " என்றாராம் .
" அப்பேற்பட்ட மருந்து என்னவாக இருக்கும் கூறுங்கள் " என்றார் தமிழ் ஐயா.
எல்லோரும் சிந்திக்க...அவனும் அவளும் கைகடிகாரத்தை பார்த்தபடியே...அவன் வகுப்பறையில் ; அவள் வழிப்பாதையில் !!!
                                                      - தொடரும்...

Comments

  1. அருமை ரோபோ
    அவன் தலை வலதும் இடதும் சாய்ந்தாடியது😍😇

    ReplyDelete
  2. Nice story, waiting fr continuity .

    ReplyDelete

Post a Comment