நான் பார்த்து ரசித்து வியந்த சுவாரஷ்யமான, கிரிக்கெட் விடயங்களைத் தான் உங்களோட பகிர போறேன். உங்களுக்கும் இது புடிக்கும்னு நினைக்குறேன். நான் பாத்து ரசித்த ஒரு வீரன் தன்னோட நாட்டுக்கு எப்படி எமனா ஆகி போனான்னு தான் இதுல பாக்க போறோம். கிரிக்கெட் ஏன் உலகம் முழுதும் பிரபலமா இருக்குனு தெரியுமா?
அதைப் பற்றி அடுத்தப் பதிப்புல சொல்றேன். இப்போ கதைக்குள்ள போலாம்.
வாழ்க்கைல இந்தக் கிரிக்கெட் எவ்ளோ நம்ம வாழ்வியலோடையும் நம்மளோடையும் ஒன்றி போயிருக்குன்னு நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும். ஏன்னா நமக்குப் புடிச்ச ஒவ்வொரு வீரனையும் நம்ம வீட்ல ஒருத்தனா கொண்டாடுற அளவுக்கு அது நம்மளோட ஒன்றிருக்குன்னா அது மிகையல்ல.
கிரிக்கெட் நம்ம எந்த அளவுக்குப் பொழுது போக்கு விளையாட்டுனு நினைக்குறமோ, அதை விட நூறு மடங்கு சுவரசியங்கள் நிறைஞ்சது இந்தக் கிரிக்கெட். ஏன்னா இப்போ அதுல கடவுள் இருக்கார், கிரிக்கெட்டை அதைப் பாதுகாக்க தளபதிகள் இருக்காங்க, கொண்டாட இளவரசர்கள் இருக்காங்க.
கிரிக்கெட் இப்போ வரைக்கும் உயிரோட வச்சுருக்குன்னா அது 1975ஆம் ஆண்டு நடத்தலாம்னு முடிவான உலகக் கோப்பைனு சொன்னா அது பொருத்தமா இருக்கும். பலம் பொருந்திய இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மற்றும் மேற்கு இந்திய தீவுகள் மட்டும் ஆடிய உலககோப்பைனு சொல்லலாம். அப்படி தான் நடந்தது. அனைத்து போட்டிகளிலும் அலட்டிக்காம கப் அடிச்சு இதுதாண்டா நாங்கள்னு நின்னுச்சது வெஸ்ட் இண்டிஸ் அணி.
விக்ரம்-வேதா:தன...னண...னனணா....
(ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா )
1987இல் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடருக்கு எவ்வித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் சாதாரண அணியாக இந்தியா வந்த ஆஸ்திரேலியா, கடுமையாகப் போராடிக் கோப்பையை வென்று அசத்தியது.
ஸ்டீவ் வாஹ் தலைமையில், 1999 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட இங்கிலாந்தில் கால் பதித்த ஆஸ்திரேலிய அணி, அனைத்து அணிகளையும் அச்சுறுத்தக்கூடிய சிறந்த வீரர்களைப் பெற்றிருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவை வந்து பாருடானு சவால் விடக் கூடிய அணியாகத் தென்னாப்பிரிக்க அணி இருந்தது. கதாநாயகன் கேரி கிர்ஸ்டன், ஆலன் டொனால்ட், ஷான் பொல்லாக், ஜே காலிஸ், ஜாண்டி ரோட்ஸ் போன்ற வீரர்களைக் கொண்ட அணி அது. இது போதாதுனு தென்ஆப்ரிக்கக் கேப்டன் குரோனி வேற பிளானிங்ல பயங்கரமா இருந்த தருணம். எல்லாருமே தென் ஆப்பிரிக்கா கை தான் ஓங்கி இருக்கும்னு நினைச்ச தருணம் அது.
ஏன் 1999 பெரிய உலககோப்பையா பார்க்க பட்டுச்சுன்னா? அந்த நூற்றாண்டோட கிரிக்கெட் ராஜா யாருனு இதுல பாத்துரலாம்னு தான். 2 அணியும் சண்டை செய்ய வந்தாங்க. ஏன்னா அதுக்கு முன்னாடி வரைக்கும் 2 அணியுமே காட்டுக்கு ராஜாவா உலகத்த சுத்தி எல்லாத்தையும் தோக்கடிச்சாங்க.
இந்த இருபதாம் நூற்றாண்டின் கிரிக்கெட் காட்டுக்கு ராஜா யாருன்னு தீர்மானிக்கும் சண்டைக்காக ரெண்டு அணியும் தயாரா இருந்துச்சு. கடைசியா அந்த நாளும் வந்துச்சு. தனக்கான இரையை முன்னாடியே வச்சிருந்த தென் ஆப்பிரிக்கா அணியும்.... சாப்பிட்டா தான் உயிர் பிழைக்க முடியும்னு களத்துக்கு வந்த ஆஸ்திரேலியா அணியும் ஜூன் 13, 1999 சண்டை செய்ய ரெடியா இருந்தாங்க.
பேட்டிங் ஆட கேரியும் 22 வயசு சின்னப் பையனும் களத்துக்கு வந்தாங்க. சொன்ன மாதிரியே அந்தச் சின்னப் பையனும் ஆஸ்திரேலியாவ துவம்சம் பண்ணி 100 போட்டு 272னு பெரிய இலக்க அவங்க கிட்ட கொடுக்க அதோட ஆஸ்திரேலியா முடிஞ்சதுன்னே அப்போ எல்லாரும் நெனச்சங்க. ஏன்னா, தென் ஆப்பிரிக்காவிடம் இருந்த பௌலர்ஸ் அப்படி. அவங்க நெனச்ச மாதிரியே ஆஸ்திரேலியாவும் 48க்கு/4ன்னு அதாள பாதாளத்துக்கே போயிருச்சு.. 100 அடிச்ச சின்னப் பையனுக்கு ஒரு கெட்ட பழக்கம் அப்போ இருந்துச்சு கேட்ச் புடிச்சதும் பால அப்படியே தூக்கி போட்டு விளையாடுவான். இதை ரொம்ப நாளா பாத்துட்டு இருந்த வார்னே மேட்ச் ஆடுறதுக்கு முன்னாடியே ஆஸ்திரேலியா அணி வீரருங்கட்ட அந்தக் குழந்தைட்ட கேட்ச் போனா மட்டும் கொஞ்ச நேரம் கிரவுண்டலேயே நில்லுங்க அவன் ஆர்வத்துல பால கீழ விட வாய்ப்பு இருக்குன்னு சொல்ல, அந்தத் தருணமும் வந்தது. எல்லாம் முடிஞ்சது மிச்ச விக்கெட் எடுத்துட்டா நம்ம கூடச் சண்டை செய்ய எவனும் இல்ல நமக்குத் தாண்டா கப்னு முடிவுக்கே வந்துருச்சு தென்னாப்பிரிக்கா. ஆனா உள்ள நின்னது ஐஸ் மலை - ஸ்டீவ் வாக்னு புரியல அவங்களுக்கு சரியா வாக் 56ல ஆடும் போது அவரு அடிச்ச பால் அந்தச் சின்னப் பையண்ட வர அவனும் கேட்ச் புடிச்சதும் அதைத் தூக்கி போடுறேன்னு அந்தப் பால் நழுவி மண்ணை முத்தமிட்டுச்சு. அவன் பக்கத்துல வந்த ஸ்டீவ்வாக் கொழந்தை நீ விட்டது என்னோட கேட்ச் இல்ல உன் நாட்டோட கோப்பையைனு. ஆமா வாக் 120 ரன் அடிச்சு அந்த மேட்ச்ச வின் பண்ணி குடுப்பாரு. அதோட சொல்லாம சொல்வார் 20ம் நூற்றாண்டோட ராஜா மட்டும் இல்லை இனி எப்பவுமே நாங்க தாண்டா ராஜானு.. அந்தச் சின்னப் பையன் செஞ்ச ஒரு தப்பால இப்போ வரைக்கும் அந்த அணிக்கு ஜோக்கர்ஸ்ன்ற பட்டம் தொடர்ந்துட்டே இருக்கு..
அந்தச் சின்னப் பையன் வேற யாருமில்லை. 300 ரன் அடிச்சாலே அதை திருப்பி அடிக்கக் கஷ்டபடுற காலத்துல ஆஸ்திரேலியா அடிச்ச 430 ரன்னை 3 மணி நேரத்தில சேஸ் பண்ணி தன்னோட பழியை ஓரளவுக்குத் தீர்த்துகிட்ட ஹர்ஷல் கிப்ஸ் தான் அந்தக் குழந்தை. மொட்டை மண்டை, காதுல ஒரு தோடு, 00ன்ற நம்பருக்கு சொந்தக்காரன்; நேர்த்தியான ஷாட்கள் அவன்ட இயற்க்கையாவே வரும்.
அந்தச் சின்னப் பையன எந்த அளவுக்குப் புடிக்கும்னா இப்போ வரைக்கும் என்னோட ஸ்போர்ட்ஸ் t-shirt நம்பர் 00 போட்டு வச்சுக்குற அளவுக்குப் புடிக்கும் அவன் ஆட்டம்.
-சுவாரசியங்கள் தொடரும்
Comments
Post a Comment