தேவியின் கதை - பகுதி 1

 இவள் வாழ்வின் ஒவ்வொரு நொடியின் வலிகளும் நம் இதயத்தை மழுவாழுதமாய் வதைக்கின்றன... பூலான் தேவி பூக்களின் ராணி.... பெயரில் மட்டும் பூக்களைக் கொண்டவள்... ஆனால், வாழ்க்கையோ முற்களைக் கொண்டு காயங்களால் தைக்கப்பட்டவள்.... சமூகத்தின் நிலையைக் காட்டும் நிலைக்காட்டி இவள்... சுவாசிக்கத் தொடங்கிய நொடி முதலே‌... துயரையும் சேர்த்து சுவாசிக்க ஆளாக்கப்பட்டவள்.... முதல் பக்கம் முதல் முடிவுறும் பக்கம் வரை ஏதோ ஒரு வார்த்தைகளால் விவரிக்க இயலா வலி நம்மை அறியாமலேயே நம்மைத் தொடரும்... இவளின் சவவாழ்வு பலரது கொடும் மனதினை மாற்றட்டும்!!!!!..

உத்திரப் பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கில் கோர்கா கா பர்வா என்ற கிராமத்தில் தேவிதீன் - மூலா தம்பதிக்கு பிறந்தவள் தான், பூலான் தேவி. தேவிக்கு ஒரு அக்கா (ருக்மிணி), இரு தங்கை (சோட்டி மற்றும் பூரி) கடைசியாக ஒரு தம்பி (சிவநாராயணன்). தேவியின் குடும்பம் யமுனை ஆற்றங்கரையில் வசித்து வந்தது. தங்கும் குடிசையைத் தவிர வேறு நிலமேதும் இல்லை. தேவியின் பெரியப்பா, தன் தந்தையின் நிலத்தை அபகரித்துக் கொண்டான். அவன் மாடி வீட்டில் வசிப்பவன், செல்வந்தன். இருப்பினும், தேவியின் குடும்பம் நாசமாக வேண்டுமென்பது, அவனின் நீண்டகால ஆசை.



தேவியின் தந்தை தச்சு வேலை செய்பவர். எவ்வளவுதான், வேலை செய்தாலும், பதிலுக்கு ஒரு மரக்காய் நெல் மட்டுமே ஊதியமாக தரப்படும். ஏனென்றால், இவர்கள் மல்லாஸ் இனத்தை சார்ந்தவர்கள், சமூகத்தில் கீழ் சாதி என முத்திரை அளிக்க பெற்றவர்கள். அக்கிராமத்தில், மற்றொரு சாதியான தாக்கூர்களுக்கு இவர்கள் அடிப்பணிந்து வாழ வேண்டிய கட்டாயம். தேவியின் வீட்டில் அத்துனை வறுமை,எவ்வளவென்றால் தேவிக்கு மாற்றுடை கூட கிடையாது. தன் ஆடையானது யமுனையில் துவைக்கப்பட்டு காயும்வரை, அவள் நிர்வாணமாக காத்திருக்க வேண்டும். தேவியின் தாய் இருப்பவர்கள் போதாதென‌ இப்பொழுது வேறு வயிற்றில் சிசுவை சுமக்கிறாள். அக்குழந்தை பிறந்த பிறகு, தாய்ப்பாலுக்கு பதிலாக தண்ணீர் மட்டுமே ஊட்டி வளர்க்கப்போவதாக தற்பொழுதே முடிவெடுத்தாள்.

யமுனையின் எதிர்கரை எவருக்கும் சொந்தமில்லை. தேவியின்‌ குடும்பம் தர்பூசணி,பூசணி போன்ற கொடி வகைகளை பயிரிடுவர். அதனை சந்தையில் விற்பதன் மூலமே, இக்குடும்பம் சிறிதளவு பணத்தினை ஈட்ட வழி கிடைத்தது.

ஊர் பஞ்சாயத்து தலைவன் சத்பன்சிங் மகன் கிஷன்,எப்பொழுதும் யமுனை ஆற்றங்கரையில் கட்டில் ஒன்றைப் போட்டுக்கொண்டு அங்கு நீராட வரும் பெண்களிடம் இச்சையாக பேசுவதையே வழக்கமாய் கொண்டவன். ஒன்பது வயதே ஆன தேவியிடம் தாய் மூலா அடிக்கடி கூறும் ஒரே வாக்கியம், "என்ன ஆனாலும் அங்கு குளிக்கச் செல்லாதே தேவி அவர்கள்,உன்னை கற்பழித்துவிடுவார்கள்" என்பதே‌.

உடல்நலம் சரியில்லாத தேவியின் பெரியப்பா இறக்க நேரிடுகின்றது. அவன் இறப்புக்கு பின், அவனது மகன் மாயாதீன் தேவியின் குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழ தொடங்கினான். அவன்‌ மாற்றத்தை கண்ட தேவிதீனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. தேவியை அவனுக்கு தெரிந்த ஒரு இடத்தில் மணம் முடித்து வைப்பதாக வாக்களித்தான். வரதட்சணையாக கொடுக்க வீட்டிலிருக்கும் வேப்ப மரத்தினை விற்குமாறு ஆலோசனை வழங்கினான். ஒருநாள் இரவு, தேவியும், சோட்டியும் தவிர வீட்டில் எவருமில்லை. அதை, பயன்படுத்திக்கொண்ட தேவியின் பெரியப்பாவின் மகன் மாயாதீன், இரவோடு இரவாக மரத்தை ஆள்‌ வைத்து அறுக்கத் தொடங்கினான்‌. சத்தம் கேட்ட தேவி,சோட்டியை எழுப்பி,"வா யாரோ மரத்தை அறுப்பது போல் உள்ளது", என்றாள்.அதற்கு,சோட்டி,"உனக்கென்ன பைத்தியமா அக்கா?....இந்த இரவில் யார் வரப்போகிறார்கள்?.... எனக்கு வெளியே வர பயமாக இருக்கிறது... படு, காலையில் பார்த்து கொள்வோம்", என்று உறங்க தொடங்கினாள். மறுநாள், விடிகின்றது... முதல் வேலையாக தேவி மரத்தை பார்க்கச் சென்றாள். ஆனால், மரமானது அறுக்கப்பட்டு மாட்டுவண்டியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது. 

இவையனைத்தும், மாயாதீன் கண்காணிப்பில் அரங்கேறின. தேவி உடனே வண்டியில் கட்டப்பட்டிருந்த மாட்டின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு..... இது எங்கள் மரமென்றாள். இதனால், தேவிக்கு சவுக்கடி வழங்க மாயாதீன் கட்டளையிடுகிறான். ஆனால், அவள் அசைந்தபாடில்லை. இறுதியாக, அடித்த அடியில் அவள் உடை கிழிந்த நிலையில் மயக்கமுற்றாள். தேவிதீனும் மூலாவும் வீடு திரும்பினர். நடந்தவற்றை அறிந்த அவர்கள்,"ஏன் தேவி உனக்கிந்த நிலை... அவன் செல்வந்தன்.. அவனை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்ய இயலாது", என்று அழுதவாரே சோர்வுற்று உறங்கினாள். சோட்டியும், தேவியும் ஒரு நாள் மாயாதீன் வயலின் பக்கம் சென்றுகொண்டிருந்தனர். அங்கிருந்த நிலக்கடலையினை பார்த்த தேவிக்கு... அதில் ஒன்றையாவது ருசிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றுகின்றது. ஆனால், அந்நேரம் பார்த்து இருவரும் மாயாதீனிடம் சிக்கிக்கொள்கின்றனர். இருவரையும் இழுத்துக் கொண்டு.... அவன் பஞ்சாயத்தை கூட்டினான். பஞ்சாயத்தில் சோட்டிக்கு 

நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.... அடுத்து அனைவரது கண்களும் தேவியை நோக்கியே இருந்தன. ஆனால், தீர்ப்பு அவளுக்கு சாதகமாய் அமைந்தது. என்னதான் இருந்தாலும் அந்த நிலத்தில் தேவிதீனுக்கும் பங்குள்ளது.... எனவே, அந்நிலத்தில் அவளுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. அவள் குடும்பத்திற்கு சேர வேண்டிய பங்கை மாயாதீன் அளிக்க வேண்டுமென தீர்ப்பளிக்கின்றனர். மாயாதீனால் ஒன்றும் செய்ய முடியவில்லை... அவனது வஞ்சம் இன்னும் அதிகரிக்கின்றது. தேவியின் பெற்றோர்கள் மாயாதீனின் மீது பயத்தில்... அடுத்தென்ன நேருமோ?... என அஞ்சி நின்றனர். ஆனால், தேவிக்கு அத்துனை மகிழ்ச்சி... முதன் முறையாக தன் வாழ்நாளில் இன்பத்தை காணுகிறாள். "அம்மா... நம் நிலம்.. நம் நிலக்கடலை", என ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தாள்.

ஒரு வழியாக பதினொரு வயதில் தேவியை ஒரு வயதான ஏற்கனவே திருமணமான புட்டிலால்‌ எனும் அரக்கனுக்கு மணம் முடிக்கின்றனர்‌................

 -தொடரும்...

-யவிண்குமார்


Comments

  1. தங்களின் கதைத் திறன் அழகாக உள்ளது..நம் நாட்டின் உ. பி போன்ற மாநிலங்களில் நிலவும் வறுமை , மக்கள்தொகை பெருக்கம் ,மூட நம்பிக்கை போன்றவற்றை அழகாக எடுத்து காட்டியுள்ளீர்கள்.....வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள் அண்ணா!!!..❤️❤️❤️

      Delete

Post a Comment