இராஜ இராஜ சோழனும் இரஞ்சித்தும் - அவிரதன் பேராணந்தம்

இராஜ இராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித்(இயக்குனர்)பேசியது பலரையும் விமர்சிக்க வைத்தது. இதில் அவர் காலம் பொற்காலம் அல்ல கற்காலம்,அவர் காலத்தில் தான் தமது நிலம் பறிக்கபட்டதாகவும் கூறினார், அவர் காலத்தில் தான் சாதி அமைப்பு இருந்தது என்று கூறினார்.ஆனால் ராஜ ராஜன் காலத்தில் நிலங்கள் பரிக்கப்படதற்கான சாத்தியக்கூறுகள் ஏதுவும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தற்போது திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்தில் வடசென்னையில் பூர்வ குடியினரின் நிலங்கள் பறிக்கப்பட்டது சகோதரர் ரஞ்சித் கண்களுக்கு தெரியவில்லையா? இன்று குடிநீருக்கு அல்லல்படும் காலத்தில் உள்ளோம். ஆனால் ஏரிக்கே வாரியம் அமைத்த சோழனின் காலத்தை கற்காலம் என்று விமர்சிக்கும் காலத்தில் உள்ளோம். ராஜ ராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலை  பூஜை செய்தவர் ராஜ ராஜ சோழ பெரும்பரையர் என்று கோவில் கல்வெட்டுகள் ஏந்துகிறது. இதில் எங்கிருந்து சாதி வந்தது ஒரு மாமன்னனை அவ்வாறு கூறியது அறியாமையின்  வெளிப்பாடாக ஏன்  கருதக்கூடாது? சோழ மண்டலத்தில் வாழ்ந்த சிறு விவசாயி முதல் அந்த நாவிதர்கள் வரை அனைவர் பெயரும் கல்வெட்டுகள் எந்துகின்றன. அரசர்களுக்கு சிகை, முடி வெட்டிவிடுபவர்களை கூட கல்வெட்டுகளில் ராஜ ராஜ பெரும் நாவீதர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் ராஜராஜன்.
தேவதாசிகள் குறித்து அவர் பேசியதில்  26 தாசிகளை கோலார் தங்கவயலுக்கு விற்றதாக கூறியுள்ளார்.அவர் அவ்வாறு செய்ததற்கான கூறுகள் எதுவும் இல்லை. ஆனால் கோவில் தேவரடியார்கள் என்று  அழைப்பதே சரியான முறையாகும் .தேவரடியர்கள் என்றால் இறைவனுக்கு அடியார்கள் என்று பொருளாகும்.தன்னை இறைவனுக்கு அற்பணித்தவர்கள் என்று பொருள்.கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் தேவரடியார் என்று குந்தவை நாச்சியார் (ராஜ ராஜ சோஜானின் தமக்கை), சோழமாதேவி பெயரும் என் இடம் பெற்றிருக்கிறது. சோழன் எவ்வாறு தன் குடும்பப்பெண்களை ஒரு இழிவான தொழிலை செய்ய அனுமதித்து இருப்பான் ராஜ ராஜ சோழன். ராஜ ராஜ சோழன் காலத்தில்  எவரும்  தாசிகளாக நடத்த பட்டது இல்லை என்பது சாத்திய கூறுகள் சொல்லும்.தமிழரின் பெருமையாய் கருதப்பட வேண்டியவன் இன்று விமர்சனத்திற்கு ஆளாக்கப்படுகிறான்.சாதியை ஒழிக்க நான் தயார் என்று பலர்  முன்வருகின்றனர். சாதி ஒழிய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் .நான் ஒரு தனி சமூகம் என்று கூறுவதே சாதியத்தின் வெற்றி தான்.அனைவரும் தமிழன் என்று ஒன்றினைந்தால் சாதி என்று ஒன்று இருக்காது.
காவிரி நதிக்கு வாரியம் அமைக்க முடியாத நாட்டில் அன்றே ஏரிக்கு வாரியம் மற்றும் அமைச்சர்கள் அமைத்த மன்னன் அவன்.
இன்றும் ஆராய்ச்சியாளர்கள் வியப்பது "அந்த கல்லை கோபுரத்தின் மேல் எவ்வாறு ஏற்றீருப்பார்கள் ?"
அவர் படையெடுத்து வென்ற இலங்கை, சிங்கப்பூர்,மளத்தீவிகள் போன்ற பல இடங்களில் மக்களின் மனம் கவர்ந்த மன்னனாகவே கருதப்பட்டார். ராஜ ராஜ சோழன் சைவ சமயத்தை பின்பற்றுபவர் ஆயினும் பல பெருமாள் கோவில்களை எழுப்பியுள்ளார்.
இவ்வாறு பேசிக்கொகுறைகள் கண்டால் அனைவர் மீதும் குறை இருக்கும்.இராஜ இராஜ சோழன் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியது இறைவனை வைத்து மக்களை சந்தித்தவன் ராஜ ராஜன். தஞ்சை பெரிய கோவிலில் விளக்கு எரிய நெய் ஊற்றாதீர்கள் மாறாக ஆடுகளை கொடுங்கள் என்றார் . அந்த ஆடுகளை சிறு குறு விவசாயிகளை அழைத்து அந்த ஆடுகளை அளித்தார். அதற்கு மாறாக கோவிலுக்கு விளக்கு எரிய நெய் கொடுங்கள் என்றார் .கோவிலில் விளக்கும் எரிந்தது ஏழை வீட்டில் அடுப்பும் எரிந்தது. அவனது நிர்வாக திறமையை நாம் போற்ற வேண்டும். இராஜ ராஜனை  காலத்தோடு சேர்ந்து புரிந்து கொள்ள வேண்டும் . அனைவர் ஆட்சியிலும் குறைகள் உண்டு. ன. இன்று ஓடும் பேருந்தில்,வானூர்திகளில்,திரையரங்குகளில் ஒழிந்த தீண்டாமை குடியிருப்பு மற்றும்  சுடுகாடுகளிலும், மக்களின் மனதிலும் ஒழிய இன்னும் வெகு காலங்கள் இல்லை.
ஊரும் சேறியும் ஒன்றாகும் நம் நாட்டில் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.

சாதிய சாக்கடையில் வாழும் மீனே
உனக்கு நன்னீர் வாசம் பழகிடுமோ....
சாதி என்னும் நஞ்செடுத்து
தேன் அமுதில்   கலந்து என்ன கிடைத்திடுமோ.....
மேகங்கள் மறைத்த சூரியனாய் மனிதம் இன்று மறைந்திடுமோ...
சேற்றில் ஏர் ஏந்திய கை இன்று சாதிய வெறியில் கத்தி ஏந்திடுமோ....
பால்வாசம்  கொண்ட பிள்ளைகளும் சாதியை உண்டு வளர்ந்திடுமோ...
நானிலம் ஆண்ட மன்னர் மனம் சாதியம் கண்டு குமுறிடுமோ.....


Comments

  1. Kalviyae sathiyin adipadaiyil pangitu vazhanga padikuradhu,andha kalviyil saathi illai adi papa yena karpika padukiradhu .idhil yedhai kavanipadhu

    ReplyDelete
  2. Samoogatha economical status vachi divide ennaiki panromo anniki than saathi ozhiyum ...appo than ezhai makkal nalla irupanga

    ReplyDelete
  3. Raja Raja cholan such a great person . Caste can abolish only by the thoughts of youngsters .

    ReplyDelete

Post a Comment